Pagetamil
இலங்கை

நாளை முதல் மழை பெய்யும்!

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (18) முதல் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய சேதங்களுக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்

தங்கமுலாம் பூசிய துப்பாக்கி: துமிந்த திசாநாயக்க விரைவில் கைது?

Pagetamil

கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: இறுதி நாட்களில் நடந்தது என்ன?; தாயார் இன்று நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியவை!

Pagetamil

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ் சிறையில் அடைப்பு!

Pagetamil

நல்லூரில் சர்ச்சைக்குள்ளான அசைவ உணவகத்தின் பெயர் பலகையை அகற்றிய மாநகரசபை

Pagetamil

‘இனி பிரபாகரனின் உப்பு இல்லை’: மெல்ல மெல்ல வெளிப்படும் ஜேவிபியின் பயங்கர முகம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!