2019; தமிழ் அரசியல் பிரமுகர்கள் அதிகம் சொன்னவை!

நாளை புதிய ஆண்டு. ஒவ்வொரு முறையும் புதிய ஆண்டு பிறக்கின்றபோது, மக்கள் புது நம்பிக்கையுடன் புத்தாண்டை எதிர்கொள்வார்கள். ஆனால், யதார்த்தம் என்னவோ, எந்த ஆண்டிலும், எந்த வித்தியாசமும் இல்லாமலிருப்பதே.

அரசியல் தீர்வு, அபிவிருத்தி, மாற்று தலைமை என தமிழ் மக்களிற்கு ஒவ்வொரு ஆண்டிலும்  நமது அரசியல் தலைவர்கள் மக்களிற்கு புது நம்பிக்கை கொடுத்தபடியிருக்கிறார்கள்.

புதிய ஆண்டிலும், புது நம்பிக்கையுடன் நமது அரசியல் தலைவர்கள் வருவார்கள். இதுவரை எப்படி அரசியல் செய்தார்களோ, அப்படியே தொடர்வார்கள். எதைச் சொன்னார்களோ, அதையே திரும்பவும் சொல்வார்கள்.

சரி, அதைவிடுவோம். நமது அரசியல் தலைவர்களின் அரசியலை புரிந்து கொள்ள, ஒரு ஜாலியான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அவர்கள் எந்த சொல்லை, வசனத்தை அதிகம் பாவித்தார்கள் என்பதே இந்த பட்டியல்.

இந்த பட்டில் அவர்களின் கடந்த ஆண்டு அரசியலையும், எதிர்கால அரசியலையும் புரிந்துகொள்ள உங்களிற்கு உதவும்.

இரா.சம்பந்தன்- “நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்“

சுரேஷ் பிரேமச்சந்திரன்- “தமிழ் அரசுக்கட்சியினர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்“

மாவை சேனாதிராசா- “போராட்டம் வெடிக்கும்“

டக்ளஸ் தேவானந்தா- “என்னை நம்புங்கள்“

செல்வம் அடைக்கலநாதன்- “எம்மை இனியும் ஏமாற்ற முடியாது“

ஞா.சிறிநேசன்- “விஞ்ஞானபூர்வமான அபிவிருத்தி“

க.வி.விக்னேஸ்வரன்- “குரு ப்ரம்மா“

வீ.ஆனந்தசங்கரி- “சேனாதிதான் அனைத்தையும் அழித்தது“

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- “எமது மக்களுக்கு விளங்கவில்லை“

செ.கஜேந்திரன்- “இந்தியா- சீனாவிற்கிடையிலான அரசியல் போட்டி“

த.சித்தார்த்தன்- “நாங்கள் அதைப்பற்றி ஆலோசிப்போம்“

எம்.ஏ.சுமந்திரன்- “திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன்“

எம்.கே.சிவாஜிலிங்கம்- “கொழுக்கட்டை… மோதகம்“

அனந்தி சசிதரன்- “சிங்கள பேரினவாத அரசு“

விநாயகமூர்த்தி முரளிதரன்- “இவன்… தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரன்“

சாந்தி சிறிஸ்கந்தராசா- “நான் 10 ஏக்கர் காணி பிடிக்கவில்லை“

கி.துரைராசசிங்கம்- “ஒரு குட்டிக்கதையுள்ளது“

ச.வியாழேந்திரன்- “மாற்றின சமூகம்“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here