சீரியல் நடிகை ரேகாவின் கணவர் கோபிநாத் கள்ளக்காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்து வெளியாகி சின்னத்திரை வட்டாரத்தையே அதிர்ச்ச்சியடைய வைத்தது.
அண்மைக்காலமாகவே சீரியல் பிரபலங்கள் வில்லங்கத்தில் சிக்கி வருகிறார்கள். அதிலும், குறிப்பாக கள்ளக்காதல் விவகாரத்திலேயே அதிகமாக சிக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், சீரியல் நடிகை ரேகாவின் கணவர் கோபிநாத்தும் அப்படியொரு விவகாரத்திலேயே சிக்கினாரி. அவரது அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும், இதன் காரணமாக தம்பதிகளிற்கிடையே ஏற்பட்ட பிரச்சனை, கடன் பிரச்சனை, மன உளைச்சலில் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பின், அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மறுநாள் அலுவலகம் வந்த ஊழியர்கள் கோபிநாத் தூக்கில் தொங்குவதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், கள்ளக்காதல் விவாகரம் மற்றும் கடன் தொல்லையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை ரேகாவின் கணவர்தான் தற்கொலை செய்ததாக பரவிய தகவலை, சீரியல் நடிகை ரேகா மறுத்துள்ளார்.இறந்த கோபிநாத்தின் மனைவியின் பெயர் ஜெனிபர் ரேகா என்றும், ஆனால் பலரும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கணவர் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். அந்த ரேகா நான் இல்லை என கூறியுள்ளார்.
ரேகா தொகுப்பாளினியாகவும், ஓவியா, நாம் இருவர் நமக்கு இருவர், போன்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.