2000 ரூபா பிராண்டட்டை தொடர்ந்து தமிழ்ச்செல்வியின் அடுத்த அலப்பறை!

அண்மையில் ரிக்ரொக்கில் ரகளை செய்த தமிழ்ச் செல்வியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழ்ச் செல்வி என்றதும் நினைவிற்கு வராதவர்களிற்காக- “ஆமா என்னோட பிரா தெரியுது. இப்ப என்ன அதுக்கு? நயன்தாரா பிகினி போட்டுட்டு வந்தா மட்டும் 32 பல்ல காட்டிகிட்டு ஈனு இழிக்கிரீங்கள்ள, பிரா தெரிஞ்சா என்ன, அப்படியே புழுங்கி செத்தரவா போறேன், Rs.2000 போட்டு பிராண்டட் ப்ரா வாங்குறனல்ல, அதை காட்டுவதும் காட்டாததும் என்னுடைய இஸ்டம், பிடிச்சா பாரு, இல்லனா போயிட்டே இரு.” என்று கூறி சிறிது நாளாக தமிழ் பேசும் நல்லுலகம் எங்கும் காட்டுத்தீயாக பரவிய அதே அம்மணிதான்.

ரிக்ரொக்கில் அவரது 2000 ரூபா தத்துவம் காட்டுத்தீயாக பற்ற, அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கினார்கள். அவர் கணக்கையே மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

அதன்பின் அந்த விவகாரம் அப்படியே மறக்கப்பட்டு, தமிழ்ச்செல்வியும் எல்லோரும் மறக்க ஆரம்பித்தார்கள்.

யாருமே தன்னை மறக்கக்கூடாது என்றோ, என்னவோ, அடுத்த அலப்பறையை இன்ட்ஸ்டகிராமில் தொடங்கியுள்ளார்.

செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள இவர், சின்ன மார்பகம் பெரிய இதயம், சின்ன கல்லு பெத்த லாபம் என்று ஒரு பதிவைப் போட்டு, எண்ணெய் ஊற்றிவிட்டுள்ளார்.

பிறகென்ன, பற்றிக் கொண்ட எண்ணெய் ஆலையைப் போல, விவகாரம் சமூக வலைத்தளங்களில் கொழுந்து விட்டு எரிகிறது. வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கெட்ட கெட்ட வார்த்தைகளால் தமிழ்ச்செல்வியை இணைய உலகம் திட்டி வருகிறது.

இது என்னடா… எந்தப்பக்கம் போனாலும் முட்ட வேண்டியிருக்கிறதே என்றோ என்னவோ, இன்ஸ்டகிராம் கணக்கையும் டிஅக்டிவேட் செய்து விட்டு, இப்பொழுது தமிழ்ச்செல்வி தலைமறைவு.

அடுத்தது ருவிற்றர் பக்கமா அம்மணி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here