இது சீரியல் உலகத்திற்கு போதாத காலம் போல. அடுத்தடுத்து கள்ளக்காதல் விவகாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் சீரியல் நட்சத்திரங்கள். சமீபத்தில்தான் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரின் கள்ளக் காதல் விவகாரம் விஸ்பரூமாகி, சந்தி சிரித்தது.
இன்னும் அந்த பிரச்சனையை கூட முடியாத நிலையில் மீண்டும் ஒரு சின்னத்திரை ஜோடியின் கள்ளக் காதல் பிரச்னை பூதாகரமாகி உள்ளது.
பகல் நிலவு சீரியலில் நடித்த அசீம் மற்றும் சிவானி நாராயணன்தான் இம்முறை சிக்கிய கள்ளக்காதல் ஜோடி.
இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்தனர். மீண்டும் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலிலும் நாங்கள் தான் நடிப்போம் என அடம்பிடித்து இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். அப்போதிலிருந்தே அசீம்க்கும் அவரது மனைவி சோயாவுக்கும் இடையே பிரச்சனையை துவங்கியுள்ளது.
அசீம் மற்றும் சோயா இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அசீம், சிவானி ஆகியோருக்கு இடையே நெருக்கம் அதிகமாக இருந்ததை அறிந்த சோயா, பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் வந்துள்ளது.
ஷிவானிக்கு 19 வயதுதான் ஆகிறது. அசீம் தான் சிவானிக்கு ஆசை வார்த்தை காட்டி மயக்கியதாக சிவானிக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
இவர்கள் இருவரும் தான் சிறந்த புதுமுக ஜோடிகள் என விருது கொடுத்து உசுப்பேத்தியதுதான் இவ்வளவுக்கும் காரணம் என புலம்புகிறாராம் சோயா.