இணையத்தில் நடந்த கள்ளக்காதல் கொஞ்சல்கள்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய மகாலட்சுமி

சின்னத்திரை நட்சத்திரங்கள் மகாலட்சுமி மற்றும் ஈஸ்வர் இடையிலான கள்ளக்காதல் தான் இப்பொழுது ஹொட் ரொப்பிக்காக உள்ளது. ஈஸ்வர் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் மாறி மாறி தங்களை வெளிப்படையாக கழுவிக் ஊற்றிக் கொண்டிருப்பது, இந்தப் பிரச்சனையில் மேலும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறது.

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தேவதையை கண்டேன் சீரியல் ஹீரோவாக நடித்து வருகிறார். அதே சீரியலில் ஹீரோயினாக VJ மகாலட்சுமி நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறியுள்ளது என ஜெயஸ்ரீ குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தன்னை விவாகரத்து செய்து விட்டு செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், மேலும் தன்னுடைய குழந்தை என்றும் பாராமல் தவறாக நடக்க முற்பட்டதாகவும் ஜெயஸ்ரீ குற்றம் சாட்டியிருந்தார். இதனால் போலீசார் ஈஸ்வரை சிறையில் வைத்தனர்.

ஜாமினில் வெளிவந்த ஈஸ்வர், மகாலட்சுமி கணவருக்கும் தனது மனைவி ஜெயஸ்ரீக்கும் தொடர்பு இருப்பதாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குறிப்பிட்டார். மேலும் மகாலட்சுமிக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை என தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்நிலையில் இருவரும் ஃபேஸ்புக்கில் கொஞ்சிக்கொண்டே மெசேஜ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகாலட்சுமியின் குழந்தை ஈஸ்வரை அப்பா என கூப்பிட்டதாகவும் ஜெயஸ்ரீ குறிப்பிட்டு இருந்தார்.

இருவருக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்யும் வகையில் மகாலட்சுமி, ஈஸ்வரை பையா என கொஞ்சியதும், பதிலுக்கு ஈஸ்வர், மகாலட்சுமியை பப்பு என கொஞ்சியதும் ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here