தீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்… மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை!

சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கும் கணவனுக்குமிடையிலான மோதல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நாளாந்தம் பல தகவல்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய கணவருடன் சீரியல் நடிகை மகாலட்சுமி தகாத உறவு வைத்துள்ளதாக கூறி பகிரங்கமாக குற்றம் சாட்டினார் ஜெயஸ்ரீ. இந்த தகவல் சின்னத்திரையை அதிர்ச்சி அடைய செய்தது.

பின் ஜெயஸ்ரீ ஒவ்வொரு ஊடகமாக சந்தித்தது கணவர், சூதாட்டம் விளையாடி இலட்சக் கணக்கில் பணம் கோட்டை விட்டதாகவும், மகாலட்சுமிக்கு முன் இரண்டு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், நான் என்று நினைத்து குழந்தையிடம் கூட தவறாக நடந்து கொண்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார்.

ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பெயரில் ஈஸ்வர், மற்றும் அவருடைய அம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது பெயிலில் வெளிவந்துள்ள ஈஸ்வர், நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தனக்கும் மகாலட்சுமிக்கும், ஒரே சீரியலில் நடிப்பதால், நண்பர்கள் என்கிற உறவை தவிர வேறு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், ஜெயஸ்ரீ தன்னிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் மகாலட்சுமியின் கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்புள்ளது என புதிய குண்டை தூக்கி போட்டார்.

ஈஸ்வர் பேட்டி கொடுத்த பின், மகாலட்சுமி தன் மீது கொடுத்துள்ள புகாருக்கு பதில் அளித்தார். அப்போது, ஈஸ்வரும் நானும் ஒரே சீரியலில் நடித்து வருவதால் நட்பாக பழகி வந்தோம். ஜெயஸ்ரீயின் கண்களுக்கு அது தவறாக தெரிவதாகவும் கூறி, தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு என் கணவரும் ஜெயஸ்ரீயும் தான் காரணம் என பேசினார்.

இப்படி இரண்டு குடும்பங்களும் மாறி, மாறி குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது மகாலக்ஷ்மியின் கணவர் அணில் குமார், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், மகாலட்சுமிக்கும் தனக்கும் ஜூன் மாதத்தில் இருந்து, விவாகரத்து குறித்த பிரச்சனை நடந்து வருவது உண்மை தான். தற்போது வரை தன்னுடன் ஏன் சேர்ந்து வாழவில்லை என்பது பற்றி தான் நான் மகாலட்சுமியிடம் கேட்டு வருவதாக கூறி, அதற்கான ஆதாரங்களையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

அதேபோல் மகாலட்சுமி குறித்து தவறாக பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை, அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். ஆனால் கடந்த ஜூன் மாதம் முதல் நான் மகாவிடம் பேசவில்லை என்றார் அணில் கூறினார்.

பின்னர் ஜெயஸ்ரீயுடன் தொடர்பு உள்ளதாக, ஈஸ்வர் கூறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுவரை ஜெயஸ்ரீயை மூன்று முறை தான் பார்த்து உள்ளதாகவும், நண்பர்கள் குடும்பத்தோடு அழைத்த கெட் டூ கெதர் நிகழ்ச்சியில் அவரை சந்தித்திருப்பதாகவும் தெரிவித்தார். தீபாவளி அன்றும் தன்னுடைய நண்பர் ஒருவர் வைத்த கெட் டூ கெதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதையும், அந்த நிகழ்ச்சிக்கு ஜெயஸ்ரீ வந்ததையும் உறுதி செய்தார்.

கடைசியில், மகாலட்சுமியிடம் அவருடைய கணவர் வைத்த ஒரே ஒரு கோரிக்கை அங்கிருந்தவர்களையே நெகிழ வைத்தது. அதாவது தன்னுடைய மகன் சச்சினை பார்த்து 6 மாதங்கள் ஆகிறது. எனவே எங்காவது ஒரே ஒரு முறை கூட்டி வந்து காட்டுமாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here