பம்புசெட்டில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை

தமிழில் சினிமா ஹீரோயின்களை விட சீரியல் ஹீரோயின்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோரை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் சரண்யா.

முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பிறகு இந்த சீரியல் மூலம் பிரபலமானார். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் முழுக்க முழுக்க புடவை அணிந்து இளசுகளை கவர்ந்தவர்.

தற்போது சன் டிவியில் ரன் என்ற சீரியலில் மாடர்ன் உடையணிந்து கலக்கி வருகிறார். சரண்யா சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். கிடைக்கும் சிறு நேரத்தில் கூட தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது அதையெல்லாம் மிஞ்சும் வகையில், தான் பம்புசெட்டில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். இருந்தாலும் நல்லாதான இருக்கு, இத ஏம்பா கொற சொல்றீங்க என்று ஆதரிக்கும் ஒரு குரூப்பும் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here