‘கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது’: ருவிட்டரில் மீண்டும் ட்ரெண்டாகிய லொஸ்லியா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி தொடங்கி, 105 நாட்களுடன் ஒக்டோபர் 5ம் திகதி நிறைவுற்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், பிக் பாஸ் சீசன் – 3 டைட்டில் வின்னர் பட்டத்தை மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவ் கைப்பற்றினார். ‘ரன்னர் அப்'(இரண்டாம்) பட்டத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பெற்றார். மூன்றாம் இடத்தை இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா கைப்பற்றினார்.

லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்திற்கு புதுவரவாக வந்த இவர், ஒரு சில நாட்களிலேயே தமிழக இளைஞர்களை கட்டிப்போட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய ரசிக்கும்படியான நடவடிக்கைகள் பிடித்துப்போக, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த உடனேயே அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மி பக்கமும் தொடங்கப்பட்டது.

மற்றொரு போட்டியாளரான ‘சரவணன் மீனாட்சி’ புகழ் கவினும், லொஸ்லியாவும் காதலித்தும் வந்தனர். இதுவும் இந்நிகழ்ச்சியின்போது பரபரப்பாக பேசப்பட்டது. இருந்த போதும் லொஸ்லியாவுக்கு அவரது ஆர்மி தொடர்ந்து ஆதரவளித்து வந்தது.

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் லொஸ்லியா மீண்டும் இலங்கைக்குத் திரும்பினார். அப்போது, லொஸ்லியா மீண்டும் தமிழகத்திற்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இதையடுத்து, தற்போது லொஸ்லியா கொழும்பு விமான நிலையத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் மீண்டும் தமிழகத்திற்கு வருவதாகவும், அவருக்காக கோலிவுட் காத்திருப்பதாகவும் #KollywoodAwaitsLosliya என்ற ஹேஷ்டேக்கை லொஸ்லியா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

அதே நேரத்தில் நேற்று பிற்பகல் விஜய் டிவியில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகியது. இதன் காரணமாகவும் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here