வெற்றி முக்கியமல்ல… இலக்கே முக்கியம்

கு.மதுசுதன்

வெற்றி வருகிறதோ இல்லையோ இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும் என்பது கடமை!.

ஹிட்லர் சொன்னதுபோல உன்னால் பறக்க முடியாவிட்டால் ஓடு ,ஓட முடியாவிட்டால் நடந்து செல், நடக்க முடியாவிட்டால் தவன்று செல் ஆனால் முன்னேறிக்கொண்டே இரு என்பதற்கு ஏற்றாற் போல இந்த இலங்கைத் தீவிலே தமிழர்களுக்கான தீர்வு திட்டங்கள் வருவதும் வராததுமாக, வழங்குவதும் வழங்காததுமிக, ஒரு தரப்பு வழங்க மறு தரப்பு கிழித்தெறிய, கிழித்தெறிந்த தரப்பு பின்னர் வழங்க முன்னர் வழங்கிய தரப்பு பின்னர் கிழித்தெறிய என இலங்கை தீவில் தமிழர் தரப்பு கண்ட ஏமாற்றங்கள் பல பல பல என அடுக்கிக் கொண்டே போகலாம் பல.

இவ்வாறு சதா துன்பச் சிலுவைகளையும், ஏமாற்றங்களையும் சுமந்த மக்களாக 70 வருடங்கள் இலங்கைதீவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக உலக நாடுகளை ஒரு புள்ளியில் குவிய படுத்திய குழிவாடியாய் புலிகளும் இறுதி இலக்கொன்றை அடைவதற்காக முன்னேறி இறுதியில் மௌனித்திர்கள், ஆக இலக்குகளை நிர்ணயம் செய்வதும் அதை நோக்கி முன்னேறுவது என்பது தவறான விடயமல்ல எடுத்த எடுப்பிலேயே இலக்கைச் சென்றடைய வேண்டும் இலட்சியத்தை அடைய வேண்டும் என்று வேண்டும் அதுதான் தவறான விடையம்.

யாரும் தங்களுடைய இலக்குகளை முயற்சிக்காமல் அந்த இலக்குகளை நோக்கி முன்னேறாமல் இருந்துவிட முடியாது.

அதுபோல ஒவ்வொரு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஒவ்வொரு தலைவர் பதவிக்கான ஜனநாயக தேர்தல் வருகின்ற போது தமிழ் மக்கள் தாங்களாக முடிவெடுப்பதுமுண்டு , கட்சிகள் பரிந்துரைக்க முடிவு எடுப்பதும் உண்டு, அது வழைமை.

இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் நிலைக்கு காரணமான இரண்டு முகங்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது கூட அதில் ஒரு முகத்தைக் எதிர்க இன்னொரு முகத்துக்கு ஆதரிக்கக் கூடிய ஒரு இருதலைக்கொள்ளி நிலையில்கூட தமிழர் தரப்பு 2010ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறது இவ்வாறான சோக நகர்வுகளின் ஊடாக இன்று யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது யாருக்கு ஆதரவளிக்க வேண்டும், யாருக்கு எங்களுடைய வாக்குகள் தேவை என்று நாங்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .

தமிழ் மக்களாகிய இழப்புகளை சந்தித்தவர்கள் ஆகிய தமிழர்கள் நாங்கள் தீர்மானிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

கட்சிகள் கைநீட்டி விட்டவர்களை, அல்லது மக்கள் முன்னரே தீர்மானித்து விட்ட கட்சிகளுக்கு அல்லது வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை கட்சிகள் சுட்டு விரலை நோக்கி காட்டுவதை இம்முறை ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த வகையில் இந்த முறை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முனைப்புடன் செயற்பட்டு அதனுடன் கிழக்குப் பல்கலை மாணவர் ஒன்றியமும் இணைந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடாத்துவதற்கு முன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அதாவது வழமையாக எழுத்து மூல உறுதியின்றி கண்மூடித்தனமாக எதிரிக்கு வாக்களித்துவிட்டு இருக்கிற சூழ்நிலைகளை மாற்றி ஏதாவது எங்களுக்கு தீர்வு வருமா? வராதா ?முயற்சிக்கலாமா! அந்த இலக்கை நோக்கி பயணிக்கலாமா? என்ற முழு முயற்சியுடன் இங்கு சிதறிக் கிடக்கின்ற அதாவது ஒரு கோயிலின் முன்னால் இருக்கிற கல்லில் அடித்து நொறுக்கப்பட்ட சிதறு தேங்காயாக சிதறிக்கிடந்த தமிழ் தேசியம் பற்றி சதா காலமும் பேசித் திரிகிற அந்தக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமுகப்படுத்தி ஒரு குவிய புள்ளியிலேயே நிறுத்தி ஏதாவது எங்களுக்குத் தேவையான தீர்வுகளை அந்த வருகிற சிறிலங்கா தலைவரிடம் முன்வைக்கலாம், யார் அவர் அதை ஏற்றுக் கொள்கிறாரோ அவரை ஆதரிப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று ஒரு இலக்குடன் இயங்கி இருக்கிறார்கள்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள் உட்பட்ட அனைவருக்கும் முற்கூட்டிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஏனெனில் மற்றைய கடந்த ஒன்றியங்கள் செய்யாத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள்.

தமிழர்கள் தங்களுடைய வாக்குறுதிகளை எவ்வாறு எந்த அடிப்படையில் எந்த தலைப்பின் கீழ் தீர்மானிக்க வேண்டும் என்பதை நீங்கள் இளையவர்கள் இந்த கட்சித் தலைவர்களை ஒன்றுகூட்டி ஒரு முயற்சி எடுத்து சாதித்திருக்கிறார்கள்.

இந்த முயற்சியின் பால் ஆறு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை நீங்கள் அழைத்து இருந்தாலும்கூட அதிலே ஒரு கட்சி தவிர்ந்த மற்றைய 5 கட்சிகள் இணக்கப்பாட்டுடன் ஒரு பொது இணக்கப்பாட்டுடன் ஒரு தீர்வை ஒரு உடன்படிக்கையை நீங்கள் வரைந்து முடித்து இருக்கிறீர்கள்.

இதை அரச வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ! ஏற்றுக்கொள்ளவில்லையோ! என்பது இரண்டாவது பட்சம்.

ஆனால் இந்த தமிழ் தேசியம் பற்றி சதா பேசிக் கொண்டிருக்கிற கட்சிகளையும் ஒரு மேசையிலே ஒருமுகப்படுத்தி இரண்டு, மூன்று, நான்கு சந்திப்புக்கள் என்று சலிக்காது அவர்களை ஈடுபடுத்தி அவர்களை ஒருமித்த முடிவுக்கு கொண்டுவந்து கைச்சாத்திட பண்ணியமை ஒரு படி வெற்றியே!

அதுவே உங்களுடைய முதலாவது மக்களுக்கான வெற்றி .

ஆகவே வருகிற வேட்பாளர் எந்தத் தீர்மானங்களை ஏற்கப் போகிறார்? ஏதாவது ஒரு வேட்பாளர் இந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு ஓம் என்று சொல்லப் போகிறாரா, அல்லது ஒருவர் நிராகரிக்கப் போகிறாரா, அல்லது இருவர் ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா? அல்லது எல்லோரும் ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா?
ஏற்றுக்கொண்ட பின்னர் அதை வழமைபோல கிளித்தெறிந்து காற்றீலே விட போகிறார்களா? என்று பின்னர் பார்க்கலாம்.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் வரலாற்று சம்பவமாக இந்த தமிழர் மத்தியிலே எண்ண முடியாமல் சிதறிக்கிடந்த கட்சிகளை ஒரு மேசையில் இருத்தி மனம் விட்டு பேசக் கூடிய அளவிற்கு கொண்டுவந்து அவர்கள் 99 வீதமானவர்களை ஒரு நேர்கோட்டுக்குக் கொண்டுவந்து கையெழுத்திட்ட வைமைக்கு அவர்களுக்கு முதலாவது சல்யூட் வழங்கப்பட வேண்டும் .

இனி இது வெற்றியோ! தோல்வியோ! அதற்கப்பால் தமிழர்களுடைய விடையத்தில் இவ்வாறு அனைத்து கட்சிகளும் எப்போதும் ஒரு நேர்கோடு புள்ளியில் சந்தித்து ஆத்மார்த்தமாக செயலாற்றுகிறதோ அப்போது எங்களுடைய தீர்வு திட்டத்தை ,எமது தலைவிதியை நாங்கள் தீர்மானிப்பதற்குரிய காலம் கனிந்து விட்டது. என்று கூற ஒரு பச்சை சமிஞ்ஞையே இது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here