கர்நாடகா பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

கா்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தின் கனகனமாரடி கிராமத்தில் காவிாி ஆற்றின் கிளை கால்வாய்க்குள் தனியாா் பயணிகள் பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்தது.

கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து பக்கவாட்டில் சாய்ந்த நிலையில் முழுவதுமாக நீருக்குள் மூழ்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் உயிாிழந்ததாகவும், உயிாிழந்தவா்களில் பெரும்பாலானோா் மாணவா்கள் என்று காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

தற்போது பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here