ஹரிஷ் கல்யாணிடம் Boy friend கடன் கேட்ட ரைசா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா, வெட்கமில்லாமல் கேட்ட ஒரு விஷயத்தை ஹரிஷ் கல்யாண் ஊருக்கே அம்பலமாக்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரைசா வில்சன். தனுஷின் ‘விஐபி 2’, ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ரைசா, இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ரைசாவுக்கு ஜோடியாக மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இவர்களது காம்போ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கி வரும் ‘ஹலோ சகோ’ நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஜோடியாக கலந்துக் கொண்டனர்.

அப்போது, ரைசா சிங்கிளா கமிட்டடா? என்று ஸ்ருதிஹாசன் கேட்க, மிகவும் தீர்க்கமாக அவர் சிங்கிள் தான் என ஹரிஷ் கல்யாண் பதிலளித்துள்ளார். அதெப்படி இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்றீங்க என ஸ்ருதி கேட்க, அதற்கு ஒரு விளக்கத்தை அளித்து ரைசாவின் மானத்தையே வாங்கிவிட்டார்.

கல்யாண் சொன்ன பதில் இதுதான்- “எனக்கு ஒரு பாய் ஃபிரெண்ட் வேணும். உன் ஃபிரெண்ட்ஸ் யாராவது இருந்தா சொல்லு என்று ஏற்கனவே ரைசா என்னிடம் கேட்டிருக்கிறார்“.

ஹரிஷ் கல்யாணின் இந்த பதிலை ரசிகர்கள் மட்டுமல்ல ஸ்ருதிஹாசன் கூட எதிர்ப்பார்த்திருக்க மாட்டார் அல்லவா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here