‘ஒரு இரவுக்கு மட்டும் படுக்கைக்கு வா’: நடிகையிடம் சிக்கி சின்னாபின்னமான இளைஞர்!

ஒரு இரவு மட்டும் தன்னை படுக்கைக்கு அழைத்த இளைஞரின் முகத்தை சமூக வலைத்தளங்களில் கிழித்து தொடங்கவிட்டுள்ளார் மலையாள நடிகை நேஹா சக்சேனா.

உலகளாவிய மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசினர். இது பெண்கள் மத்தியில் விழிப்புணர்வையும், துணிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், நேஹா சக்சேனாவின் செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மலையாள நடிகர் மம்மூட்டியுடன் ‘கசாபா’ படத்தில் நடித்து பிரபலமான நேஹா சக்சேனா. மோகன்லால், தமிழில் அர்ஜுன் ஆகியோருடன் நடித்துள்ளார்.

நேஹா சக்சேனாவிற்கு டுபாயை சேர்ந்த ஒரு நபர், ஒரு இரவுக்கு மட்டும் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியுமா என கொச்சையாக வட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை மீடியாவிடம் எடுத்துச் சென்று உன்னை கொஞ்சம் பிரபலமாக்குகிறேன் என பதிலளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து ஆவரது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை தேடிக் கண்டுபிடித்த நேஹா, அந்த நபர் அனுப்பிய மெசேஜையும், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து ஊருக்கே வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். இச்சம்பவம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா திரையுலகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நடிகை நேஹாவின் பதிவில், “இது போன்ற நாய்க்கு பாடம் புகட்டவும், பெண்களிடம் இவர் நடந்துக் கொள்ளும் கேவலமான செயலை அவரது குடுபத்தினருக்கும், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவே இந்த விஷயத்தை பகிர்கிறேன். திரை பிரபலமாக இருக்கும் நான் இதைக் கூட செய்யாவிட்டால், சாமானிய பெண்ணுக்கு எப்படி ஒரு முன் உதாரணமாக இருக்க முடியும். சமூகத்தில் இதுபோன்ற மனப்பான்மையில் சுற்றும் நாய்களை அடையாளப்படுத்தினால் தான், இனி நிர்பயா, ஜிஷா, ஆசிஃபா போன்றவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்“ என நேஹா தெரிவித்துள்ளார்.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கண்டு அஞ்சாமல், தைரியமாக அவரது முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்திய நேஹாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதனிடையே, எல்சன் என்ற அந்த நபர் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here