ஜனநாயக மக்கள் காங்கிரசின் முல்லைத்தீவு மாவட்ட தலைமை காரியாலயத்தை அதன் தலைவர் பிரபாக கணேசன் திறந்து வைத்துள்ளார்.
நேற்று (23) அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் இணைப்பாளர் வி.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கட்சியின் தலைவர் பிரபா கணேசன் மற்றும் கட்சியின் தேசிய இணைப்பாளர் டி.வை.பிரசாத் மாவட்ட இணைப்பாளர் மாதவராசா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச தொழில் அதிபர் தெய்வேந்திம் உள்ளிட்டவர்கள் ஏற்றினார்கள்.
தொடர்ந்து கட்சியின் மாவட்ட அலுவலகம் நாடாவை வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் காங்கிரசின் அலுவலகமொன்று வவுனியாவில் இயங்கி வரும் நிலையில், வடக்கில் காலூன்றும் முயற்சியின் ஒரு கட்டமாகவே புதுக்குடியிருப்பில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.