700 கோடி பெறுமதியான வைர கொள்ளையின் பின்னணியில் மாகந்துரே மதுஷ்?

700 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல் ஒன்றையும், சில மாணிக்க கற்களையும் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மிரிஹான காவல்துறையின் விசேட விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மஹகம – அருவலை பிரதேசத்தில் வசிக்கும் அனுமதிபெற்ற இரத்தினக்கல் வியாபாரி ஒருவரிடம் இருந்து கடந்த ஐந்தாம் திகதி குறித்த வைரக்கல் உள்ளிட்ட மாணிக்கக் கற்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வியாபாரி, இரண்டு வருடங்களாக கொள்ளையிடப்பட்ட வைரக்கல் உட்பட்ட மாணிக்கக் கற்களை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவரின் ஊடாக கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இரத்தினக்கல் வியாபாரியை சந்தித்துள்ளனர்.

காவல்துறை உடைக்கு நிகரான ஒரு உடை அணிந்திருந்த அவரகள் துப்பாக்கிகளை காண்பித்து, இரத்தினக்கல் உட்பட்ட பொருட்களை கொள்ளயிட்டு, அவுஸ்திரேலிய நாட்டவருடன் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த வெளிநாட்டவர் மஹரகம பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட காவல்துறை விசாரணைகளில் பாதுக்க – வட்டரெக்க பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேகநபரின் கைப்பேசியில் இருந்து வைடூரியம் மற்றும் மாணிக்கக் கற்களின் புகைப்படங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருதானை பகுதியில் வைத்து மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலக குழுத் தலைவரின் ஆதாரவாளர் ஒருவருக்கு அந்த வைடூரியம் உள்ளிட்ட பொருட்களை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாகந்துரே மதுஷின் சகாக்களால் இந்த கொள்ளை நிகழ்த்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மிரிஹான காவல்துறையின் விசேட விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here