தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
பூண்டுலோயா வீதியில் மெதகும்புர மற்றும் பேர்லன்ஸ் போன்ற பகுதிகளில் இவ்வாறு மண்சரிவுகள் மற்றும் கற் புரள்வுகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பூண்டுலோயா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், கற்பாறைகளும் மலைகளிலிருந்து உருண்டு வருவதோடு, மரங்களும் முறிந்து விழுகின்றன.
இப்பகுதியில் அதிக காற்று வீசும் பொழுது மரக்கிளைகள் முறிந்து விழுவதனால் அப்பாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவதானத்துடன் செல்ல வேண்டும்.
அத்தோடு வீதியை ஒரு வழி போக்குவரத்தாக சீர் செய்துள்ள போதிலும், வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.
ஆகையால் மாற்று வழிகளை பயன்படுத்தி பயணிகள் நிதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.