சத்திய கடதாசியில் ஆங்கிலத்திலேயே கையொப்பமிட்ட கூட்டமைப்பு எம்.பிக்கள்!

14ம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆதரவாக வாக்களித்ததாக கையொப்பமிட்ட கூட்டமைப்பு எம்.பிக்கள்

மஹிந்த ராஜபக்ச அரசிற்கு எதிராக நேற்று தொடரப்பட்ட இரண்டு வழக்குகளிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் நேற்று சத்தியக் கடதாசியில் கையொப்பமிட் தகவலை நேற்று வெளியிட்டோம். அப்போது பெரும் வாய்த்தர்க்கம், கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.

சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுவதற்கு முன்னதாக நேற்று இன்னொரு சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

சத்தியக் கடதாசியில் தமிழில் கையெழுத்திட முடியாதென கூறப்பட்டதும், சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

அரசு அமைக்கப்பட்ட விதத்திற்கு எதிராக 14ம் திகதி நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் தமிழிலேயே கையொப்பிட்டிருந்தனர். எனினும், நேற்றைய தினம் ஆங்கிலத்திலேயே கையொப்பமிடுமாறு கோரப்பட்டிருந்தது. நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆங்கிலத்தில் தேவையென அதற்கு விளக்கமும் கோரப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட சத்தியக்கடதாசிகளும் ஆங்கிலத்திலேயே இருந்தன. படித்து பார்த்து கையொப்பமிடுவதற்காக சில நாட்களின் முன்னரேயே அது வழங்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் சிறிதரன் எம்.பி அதனை தமிழில் மொழி பெயர்த்து, எம்.ஏ.சுமந்திரனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பியும் வைத்திருந்தார். அப்போது சுமந்திரன் இந்தியாவில் தங்கியிருந்தார்.

எனினும், வழக்கு கோவைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு விட்டதால், இனிமேல் அவற்றை தமிழில் மொழிபெயர்க்க நேரம் போதாதென கருதியோ என்னவோ, ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட சத்தியக்கடதாசிகளையே வழங்கி, அதில் ஆங்கிலத்திலேயே கையொப்பமிட எம்.பிக்கள் கோரப்பட்டனர்.

இதற்கும் நேற்று சிறிதரன் எம்.பி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here