சாட்டி துயிலுமில்லத்தில் குழப்ப முயற்சி?

சாட்டி துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வு- கோப்பு படம்

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை குழப்புவதற்கு சிலர முயற்சிப்பதாக மாவீரர்தின ஏற்பாட்டுக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. அந்த பகுதிக்கு தொடர்பில்லாத சிலரே குழப்பத்தில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் போராளியொருவர் மீதே ஏற்பாட்டுக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

சாட்டி துயிலுமில்லத்தில் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி இளைஞர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், முன்னாள் போராளிகள் இணைந்து மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வந்தார்கள். இம்முறை, திடீரென அங்கு வந்துள்ள மேற்படி முன்னாள் போராளி, தாமே நிகழ்வை ஏற்பாடு செய்யவுள்ளதாக கூறி குழப்பத்தில் ஈடுபடுவதாக ஏற்பாட்டுக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here