கர்ப்பத்திற்கு யார் காரணம்?- குற்றச்சாட்டை வாபஸ் வாங்கிய சிறுமி: 5 மாதத்தின் பின் இளைஞன் விடுதலை!

தன்னை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கி கர்ப்பிணியாக்கினார் என இளைஞர் ஒருவர் மீது குற்றம்சாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த சிறுமி, தனது கர்ப்பத்திற்கு அந்த இளைஞர் காரணமல்ல என மீண்டும் இப்பொழுது வாக்குமூலமளித்துள்ளார். இதனால் கடந்த ஐந்து மாதங்களாக வழக்கு விசாரணைகைளை எதிர்கொண்டு வந்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்றது.

கடந்த ஜூன் மாதம் நிறைமாத கர்ப்பிணியான 16 வயது சிறுமியொருவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். 16 வயதான சிறுமி கர்ப்பிணியாக இருந்ததால், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மூலம் விசாரணை நடைபெற்று, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இளைஞர் ஒருவரை குறிப்பிட்டு, அவர்தான் குழந்தைக்கு தந்தையென சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 4ம் திகதி சிறுமி, குழந்தையொன்றை பிரசவித்தார்.

குறிப்பிட்ட இளைஞர் மீது சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஐந்து மாதங்களாக வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், திடீரென சிறுமி புதிய வாக்குலமொன்றை வழங்கியுள்ளார். அதில், தனது கர்ப்பத்திற்கு ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த இளைஞன் காரணமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பொலிசார் இதனை மன்றிற்கு அறிவித்தனர். இதையடுத்து, குறித்த இளைஞன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கையை பெறுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here