மல்லையாவின் லண்டன் வீடும் காலியாகிறதா?

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2012-ம் ஆண்டு யு.பி.எஸ் ஏஜி என்ற சுவிஸ் வங்கியில் தனது லண்டன் வீட்டை அடமானமாக வைத்து ரூ.185 கோடி கடன் பெற்றார். இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் செலுத்துவதாக ஒப்புக்கொண்டார்.

5 ஆண்டு காலம் முடிவடைந்த பின்னரும் மல்லையா கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுவிஸ் வங்கியான யுபி.எஸ். ஏஜி நிறுவனம் லண்டன் வீட்டில் இருந்து மல்லையா குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு அந்த வீட்டை தங்கள் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வழக்கு 2019-ம் ஆண்டு மே 7ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு விசாரணை நடைபெற உள்ளது. வழக்கின் தீர்ப்பு மல்லையாவுக்கு எதிராக அமைவதற்கே அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here