பிழையாக நடந்தால் செருப்பால் அடியுங்கள்: வீடுவீடாக செருப்பு கொடுக்கும் வேட்பாளர்!

தெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் பல வித உத்திகளை பாவித்து வருகின்றனர். இந்நிலையில் கொருட்லா தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான அகுலா ஹனுமந்த் என்பவர் வீடு வீடாக சென்று வித்தியாசமாக ஓட்டு சேகரித்து வருகிறார்.

அவர், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, செருப்புகளை கொடுத்து, தான் தேர்தலில் வெற்றி பெற்று, பதவிக்கு வந்த பிறகு சரியாக பணியாற்றவில்லை என்றாலோ, வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்றாலோ தாராளமாக மக்கள் என்னை செருப்பால் அடிக்கலாம் என கூறி வருகிறார்.

அத்துடன் தனது பணியில் திருப்தியில்லை என்றால் மக்களே தன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, வருங்கால தேதி குறிப்பிட்ட ராஜினாமா கடிதத்தையும் மக்களிடம் அளித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here