தனுஷ், விஜய் சேதுபதியுடன் நேரடியாக மோதும் ஓவியா

நடிகை ஓவியா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நபரான ஓவியா, காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியையே உருவாக்கிக் கொண்டாடினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து நடிகை ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.ஆனாலும் களவாணி 2, சிலுக்குவார்பட்டி சிங்கம் , காஞ்சனா 3, 96ml உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே ஓவியா நடித்து வந்தார்.

தற்போது இந்த படங்கள் முடியும் தறுவாயில் உள்ள நிலையில் இவை அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இந்நிலையில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனுடன் மாரி 2, சீதக்காதி, கனா உள்ளிட்ட சில படங்கள் வெளியாகயுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகும் முதல் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here