காதலியை கரம்பிடித்த பிரபல வில்லன்!

நடிகர் ஹரிஷ் உத்தமன் தனது காதலியான அம்ரிதாவை குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழில் கவுரவம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். இதையடுத்து இவர் விஜய் நடித்த பைரவா, ஜெயம் ரவியின் தனி ஒருவன், தனுஷுடன் தொடரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஹரிஷ் உத்தமன் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது காதலியான அமிர்தாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது.

ஹரிஷ் உத்தமன் – அமிர்தா தம்பதியினருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here