கபாலி, காலா (ரஞ்சித். பா) தொடர்ந்து மீண்டும் இளம் இயக்குனருடன் (கார்த்திக் சுப்புராஜுடன்) ரஜினி இணைந்த படம் பேட்ட. இரண்டு கெட் அப் என்பதால், அவரின் ரசிகர்கள் இரட்டிப்பு கொண்டாட்டத்தில் உள்ளனர். தாடி வைத்து சூட்டில் மாஸ் என்றால், மீசை வைத்து வேஷ்டியில் க்ளாஸாக இருக்கிறார் ரஜினிகாந்த்.
சிம்ரன், திரிஷா, நவாஸுதீன் சித்திக், விஜய்சேதுபதி, சசிகுமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளனர் படத்தில்.
வரும் வாரம் பிரம்மாண்டமாக 2.0 ரிலீசாகிறது. பொங்கலுக்கு பேட்ட வெளிவரும் எனவும் சொல்கின்றனர் சிலர். இந்நிலையில் புதிய ஸ்டைலிஷ் போஸ்டரை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
#PettaAudiofromDec9th
The first single will be released on 3rd and second single on 7th!@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @Nawazuddin_S @SasikumarDir @trishtrashers pic.twitter.com/DzI1V2K58Z— Sun Pictures (@sunpictures) November 23, 2018
அனிருத் இசையில் முதல் சிங்கிள் பாடல் டிசம்பர் 3 மற்றும் இரண்டாவது பாடல் 7 அன்று வெளியாகுமாம். அணைத்து பாடல்களும் டிசம்பர் 9 ரிலீஸாகிறது.