இங்கிலாந்து வலுவான ஆரம்பம்!

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வலுவான ஆரம்பத்தை பெற்றுள்ளது. இன்றைய முதல்நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது இங்கிலாந்து. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் பேர்னஸ், ஜென்னிங்ஸ் விரைவில் வீழ்ந்தாலும், போர்ஸ்டோ அபாராக ஆடி சதமடித்தார். அவர் 110 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பென் ஸ்டோக்ஸ் 57, ஜோ ரூட் 46 ஓட்டங்களை பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சு சரியாக அமையவில்லை. சந்தகன் 21 ஓவர்கள் வீசி 91 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஓவருக்கு 4.33 என்ற ஓட்ட சராசரியில் ஒருநாள் போட்டி பாணியில் ஓட்டங்களை விட்டு கொடுத்திருந்தார்.

புஸ்பகுமார 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

மொயின் அலி 23 ஓட்டங்கள், ரஷீட் 13 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here