அறிமுக போட்டியில் உலக சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர்… ஒரே நாளில் 17 விக்கெட்!

பங்களாதேஷ்- மே.இ.தீவுகளுக்கும் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் 17 விக்கெட்டுகள் மொத்தம் சரிந்தன. ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி தன் 2வது இன்னிங்சில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி வருகிறது.

முன்னதாக பங்களாதேஷ் தன் முதல் இன்னிங்சில் 324 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 246 ரன்களுக்குச் சுருண்டு 78 ரன்கள் பின் தங்கியது, தற்பொது பங்களாதேஷ் 5 விக்கெட்டுகள் கையிலிருக்க மொத்தம் 133 ரன்கள் முன்னிலை பெற்று தோல்வியைத் தடுக்க போராடி வருகிறது. ஆட்ட முடிவில் முஷ்பிகுர் ரஹிம் 11 ரன்களுடனும் மெஹதி ஹசன் மிராஸ் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

17 வயது இளம் நயீம் ஹசன் உலக சாதனை:

நயீம் ஹசன்

பங்களாதேஷ் இளம் அறிமுக ஓஃப் ஸ்பின்னர் நயீம் ஹசன் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் சாதனை என்னவெனில் 17 வயது 355 நாட்களில் அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இளம் வயதில் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீசாளர் என்ற உலகச் சாதனைக்குச் சொந்தக் காரர் ஆனார்.

ஆனால் மே.இ.தீவுகளை 246 ரன்களுக்குச் சுருட்டிய அனுகூலங்களை பங்களாதேஷ் 55/5 என்று விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் கோட்டை விட்டுள்ளது. ஜோமெல் வாரிக்கன், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷ் 2வது இன்னிங்ஸ் சரிவுக்குக் காரணமாயினர்.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய நயீம் ஹசன், அவுஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் சாதனையை முறியடித்தார். பாட் கமின்ஸ் அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போது அவருக்கு 18 வயது.

ஷாகிப் அல் ஹசன் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவர் ஷெய் ஹோப், கிரெய்க் பிராத்வெய்ட் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தி பிறகு கடைசியில் கப்ரியல் விக்கெட்டைச் சாய்த்தார். தொடக்கத்தில் மே.இ.தீவுகள் 31/3 என்று தடுமாறியது. பிறகு ரோஸ்டன் சேஸ் (31). சுனில் அம்ப்ரீஸ் (19) ஆகியோர் சிறு கூட்டணி அமைத்தனர். ஆனால் நயீம் ஹசன் இருவரையும் தன் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்த மே.இ.தீவுகள் 88/5 என்று ஆனது.

88/5 என்ற நிலையில் ஹெட்மையர், டவ்ரிச் கூட்டணி அமைத்தனர், இதில் ஹெட்மையர் கொலை வெறி மூடில் இருந்தார். 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்து அபாகர எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடினார். டவ்ரிச்சுடன் சேர்ந்து 92 ரன்கள் அதிரடி கூட்டணி அமைத்தார். இறங்கியவுடன் அறிமுக நயீம் ஹசனை மிட்விக்கெட்டில் அரக்கப் புல் ஷொட் பவுண்டரி விளாசினார். மீண்டும் நயிம் ஹசனை பின்னால் சென்று மிட் ஓனில் புல் செய்தார். தைஜுல் இஸ்லாம் வந்தவுடன் இறங்கி வந்து மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ், பிறகு ஸ்கொயர் லெக் மேல் மேலும் ஒரு சிக்ஸ். நயீம் ஹசனை மேலும் ஒரு பொயிண்டில் ஒரு அபார கட் பவுண்டரி அடுத்த பந்தே மேலேறி சற்றே ஒதுங்கி லோங் ஓஃப் மேல் சிக்ஸ், இதுதன ஷொட் ஆஃப் த டே அல்லது நாளின் சிறந்த ஷொட்.

ஹெட்மையர்

ஷாகிப் அல் ஹசனை 2 ரன்களுக்குத் தட்டிவ் விட்டு 43 பந்துகளில் அரைசதம் கண்டார். பிறகு அதைக் கொண்டாட ஷாகிபை இறங்கி வந்து மிட் ஓஃப் மேல் பவுண்டரிக்குத் தூக்கி அடுத்த பந்தை உண்மையில் புல் ஷொட் போன்று ஆடினார், பந்து லோங் ஓனில் சிக்ஸ். 47 பந்துகளில் 63 எடுத்த நிலையில் மெஹதி ஹசன் மிராஸ் பந்து ஒன்றை தடுத்தாட முயன்றார், பந்துவெளியே திரும்பி எட்ஜ் ஆக முஷ்பிகுர் அருமையாக கட்ச் எடுத்தார், ஹெட்மையர் அதிரடி முடிவுக்கு வந்தது.

இதன் பிறகு நயீம் ஹசன், பிஷு, ரோச், வாரிகன் விக்கெட்டுகளை வீழ்த்தி 5 விக்கெட்டுகளுடன் அறிமுக உலக சாதனையை நிகழ்த்தினார். டவ்ரிச் 101 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்து நொட் அவுட்டாகத் திகழ்ந்தார். மே.இ.தீவுகள் ஒரு வழியாக 246 ரன்களை எட்டியது.

இதேவேளை, இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பங்களாதேஷ் வீரர் மோமினுல் ஹக் 120 ரன்களை எடுத்தார். மொத்தம் 167 பந்துகளைச் சந்தித்த மோமினுல், 10 பவுண்டரிகள் 1 சிக்சரையும் அடித்தார்.

மோமினுல் ஹக்கின் இந்தச் சதம் இதே மைதானத்தில் அவர் ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 6வது சதமாகும். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் மஹேல ஜெயவர்தன இதை விட அதிக சதங்களை அடித்துள்ளார். ஆயினும் ஒரே மைதானத்தில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை எடுத்த 10வது வீரர் ஆவார் மோமினுல் ஹக்.

இந்த மைதானம் மோமினுல் ஹக்கின் கோட்டையாகிவிட்டது. ஒரே மைதானத்தில் 2 சதங்களைத்தான் பங்களாதேஷ் வீரர்கள் அடித்துள்ளனர்.

இந்தச் சாதனை பற்றி மோமினுல் ஹக் ஆட்டமிழந்த பிறகு கேட்ட போது, ‘நான் இந்த ஸ்டேடியத்தில் இறங்கியவுடன் சதம் அடிப்பேன் என்ற எண்ணத்துடனெல்லாம் இறங்குவதில்லை. நான் உண்மையில் இதுபற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை. எனவே இது குறித்த கேள்விக்கு என்னிடம் விடையில்லை’ என்றார் தன்னடக்கமாக.

மே.இ.தீவுகள் பந்து வீச்சு நன்றாக அமைந்தது, இதனால்தன இந்த மோமினுல் சதம் தரமான சதமாகும். கப்ரியல் பந்து வீச்சை நன்றாகக் கையாண்டார் மோமினுல், கிமார் ரோச்சை நிறுத்தி நிதானமாக ஆடினார். ரோஸ்டன் சேஸ், தேவேந்திர பிஷூ தவறுகள் செய்த போது ரன்களை குவித்தார்.

மோமினுல் ஹக்

சதத்தை பவுண்டரியில் எட்டிய போது அதிக டெஸ்ட் சதங்களுக்கான பங்களாதேஷ் சாதனையை சமன் செய்தார். தமிம் இக்பாலும் 8 சதங்கள்தான், இவரும் 8 சதங்கள்தான். விராட் கோலி போலவே 2018-ல் மோமினுல் ஹக்கின் 4வது சதமாகும் இது. இதிலும் தமீமின் 3 சத சாதனையை உடைத்தார் மோமினுல் ஹக்.

நியூஸி.க்கு எதிராக 2013-ல் மோமினுல் ஹக் 181 ரன்கள் எடுத்தது இவரது சிறந்த இன்னிங்ஸ் ஆகும். கடினமான தென்னாபிரிக்காவிலும் மோமினுல் ஹக் நன்றாக ஆடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here