நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வாங்கலாமா?: செல்வத்திற்கு வந்த சோதனை!

“எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வாங்கலாமா என பொதுமக்கள் கேட்கிறார்கள்“ என ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் ஜேவிபி சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போதே இப்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மீது கூட தாக்குதல் முயற்சி நடந்தது. அன்று நாடாளுமன்றத்திற்குள் நடந்தது மோசமான சம்பவம். உலகத்திலேயே சபாநாயகர் மீதும் தாக்குதல் நடந்தது இலங்கையில் மட்டுமே இருக்க முடியும். அது கண்டிக்கப்பட வேண்டியது.

எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வாங்க முடியுமான என பொதுமக்களே கேட்கிறார்கள்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here