ஐதேகவிடம் பெற்ற எழுத்துமூல வாக்குறுதியை வெளியிடுவீர்களா: கூட்டமைப்பிற்கு அனந்தி சவால்!

ஐ.தே.கவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன ஒப்பந்தம் செய்து கொண்டது என்பதையும், ஐ.தே.கவிடம் எழுத்து மூலமாக வாக்குறுதிகள் எதையாவது பெற்றிருந்தால் அதை வெளிப்படுத்த வேண்டுமென ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளர் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் கொடிகாமத்தில், வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களிற்கான வாழ்வாதா உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“சந்திரிக்கா அம்மையார் ஒரு தீர்வுத் திட்டத்தை கொண்டு வந்தார். அந்த தீர்வுத் திட்டம் ஓரளவு சிறந்ததென இன்றுவரை பலரும் சொல்கிறார்கள். ஆனால் அந்த தீர்வுத் முயற்சியை குழப்பியவர் ரணில் விக்கிரமசிங்கவே.

சிங்களத்தின் எந்த ஆட்சியாளரும் எமக்கு தீர்வு தருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐதேகவை ஆதரிக்கிறார்கள். எந்த அடிப்படையில் ஆதரிக்கிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐதேகவுடன் ஏதாவது எழுத்து மூலமாக வாக்குறுதியை பெற்றதா? அப்படி எதையாவது பெற்றிருந்தால் அதை மக்கள் முன் பகிரங்கப்படுத்த வேண்டும்“ என வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here