ஞானசாரருக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப்பெற்றது!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (23) மீளப்பெறப்பட்டது. தேவஸ்தானமொன்றினுள் புகுந்து பொருட்களிற்கு சேதம் விளைவித்தது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2008ஆம் ஆண்டு கொஸ்வத்த கல்வாரி தேவஸ்தானத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதமாக்கியதாக, ஞானசார தேரர் மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல்நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேரையும் நிரபராதிகள் என விடுவித்தது.

இதை எதிர்த்து சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கையே மீளப்பெற்றுள்ளது சட்டமா அதிபர் திணைக்களம். வழக்கை தொடர்ந்து நடத்தவில்லையென திணைக்களத்தால், மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, வழக்கை விலக்கிக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அண்மையில் ஜனாதிபதிக்கும், பௌத்த தேரர்களிற்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here