கூட்டமைப்பின் 10 கட்டளைக்கு எழுத்துமூல உத்தரவாதம் கிடைத்ததுதான்…. But, அது ரணிலின் கையெழுத்தா என்பதற்கு உத்தரவாதம் இல்லையாம்!

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்ததையும், அதற்கு ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூல உறுதிமொழி வழங்கியதையும் நேற்றே தமிழ் பக்கம் வெளியிட்டிருந்தது.

ஆனால் அதில் ஒரு சுவாரஸ்ய விசயம் உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க கொடுத்த எழுத்துமூல உறுதிமொழி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடமே உள்ளது. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ரணில் விக்கிரமசிங்க கொடுத்த உறுதிமொழி ஆவணம் என ஒரு பிரதியை இரா.சம்பந்தன் காண்பித்துள்ளார். மேலோட்டமாக உறுப்பினர்களிற்கு காண்பித்து விட்டு, அந்த ஆவணத்தை சம்பந்தன் தன்னுடன் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அந்த ஆவணத்தின் பிரதியை கேட்ட உறுப்பினர்களிற்கு வழங்கப்படவில்லை.

தமக்கு காண்பிக்கப்பட்ட ஆவணத்தில் இடப்பட்டிருந்த கையொப்பம் ரணில் விக்கிரமசிங்கவினுடையதுதானா என்பதையோ, அது உண்மையிலேயே ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட ஆவணமா என்பதையோ தம்மால் உறுதிசெய்ய முடியாமல் உள்ளதாக தமிழரசுக்கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சற்றுமுன்னர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here