நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை ஜே.வி.பி இன்று சமர்ப்பித்தது. ஒக்ரோபர் 26ம் திகதி ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மாற்றம், அதன் பின்னரான குழப்பங்கள் தொடர்பில் ஜே.வி.பி இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தது.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சபைக்கு தலைமைதாங்கினார். இந்த விவாதங்கள் நடந்து, தற்போது மதிய போசனத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிவரை வரை இந்த விவாதங்கள் இடம்பெறும்.