எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மாணவி முன் ஆடையை அவிழ்த்த பணியாளர்; நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்!

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பணியாளர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பல மாநில மாணவர்கள், மாணவிகள் படிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர், பெண்கள் விடுதியில் லிப்டில் சென்றுள்ளார். அதே லிப்டில் கல்லூரி பணியாளர் ஒருவர் ஏறி இருக்கிறார். லிப்ட் நகர தொடங்கிய சில நொடியில் இந்தப் பணியாளர் தன்னுடைய ஆடைகளை அவிழ்த்து இருக்கிறார். பின்னர் அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைய தொடங்கியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்தப் பெண் கத்திக் கூச்சலிட்டார். ஆனால், அந்தப் பணியாளர் அந்தப் பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று இருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண் சத்தமாகக் கூச்சலிட்டு கதறியதால் பயந்து கொண்டு அந்தப் பெண்ணை வெளியேற விட்டுள்ளார்.

இது குறித்து அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் அந்தப் பணியாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றதும் மாணவர்கள் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் பலனும் இல்லாததால் தற்போது கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here