பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை கைது!

அவுஸ்திரேலியாவில் தனது சொந்த மகளை நரபலி கொடுத்த ஒரு கொடூரமான தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகிவுள்ளது,

கடந்த சனிக்கிழமை தனது ஒன்பது மாதக் குழந்தையை நரபலி கொடுத்த அந்த 48 வயது மனிதர் உடைகளைக் களைந்து அந்த குழந்தையின் உடலை கடலில் வீசியிருக்கிறார். பின்னர் திங்கட்கிழழை அக்குழந்தையின் உயிரற்ற உடல் கரை ஒதுங்கிய போது கண்டுபிடிக்கப்பட்டது.

கோல்ட் கோஸ்ட்டிலிருந்து- ஜேக் ஈவான்ஸ் படகுத்துறை வரை பயணித்த அந்த குடும்பத்தினரை பொலிசார் சிசிடிவி கமரா உதவியுடன் கண்டுபிடித்தனர்.

நரபலி கொடுப்பது குறித்து தான் அறிந்திருந்ததாக அந்த குழந்தையின் தாயாகிய 23 வயது பெண் ஒப்புக் கொண்டதையடுத்து அவள் மீதும் பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் குயின்ஸ் லாண்ட்டிலுள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். எதற்காக அந்தப் பச்சிளம் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here