நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது?- இரத்தம் சிந்தாததற்காக மக்களிற்கு நன்றி!

அநுரகுமார திசநாயக்க- அரசில் நெருக்கடிகளை தீர்க்க மக்கள் இரத்தம் சிந்தாத நிலையை பேணுவதற்காக அவர்களிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், இதுபோன்ற அரசியல் நெருக்கடிகளை ஏனைய பல நாடுகளில் இரத்தம் சிந்தியே மக்கள் முறியடித்துள்ளனர் என்றார்.

11.08 நாடாளுமன்ற தெரிவுக்குழு 121 எம்.பிக்களின் ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இலத்திரனியல் முறைப்படி வாக்களித்தவர்கள் விபரம். குரல்வழி ஐவர் வாக்களித்தனர்.

11.05 தெரிவுக்குழுவிற்கு ஆதரவாக 121 எம்பிக்கள் வாக்களித்ததாக சபாநாயகர் அறிவிப்பு

11.00 மணி-இலத்திரனியல் முறை வாக்கெடுப்பிற்கு 116 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

ஐ.ம.சு.கூ வெளிநடப்பு…தெரிவுக்குழுவிற்கு இலத்திரனியல் முறை வாக்கெடுப்பு

வெறிச்சோடிய ஐ.ம.சு.கூ பக்கம்

நாடாளுமன்றத்தில் இன்று தெரிவுக் குழு சர்ச்சை தோன்றியதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

எதிர்பார்த்ததை போலவே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவுகுழு விவகாரம் பெரும் சரச்சையாக உருவெடுத்தது. தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரங்களை சபாநாயகர் அறிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் 5, ஐதேக சார்பில் 5, ஜேவிபி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலா 1 என அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு- தினேஷ் குணவர்ததன, எஸ்.பி திசாநாயக்க, நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவன்ச.

ஐக்கிய தேசிய முன்னணி- லக்ஸ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க

தமிழ் தேசிய கூட்டமைப்பு- மாவை சேனாதிராசா

ஜனதா விமுக்தி பெரமுன- விஜித ஹேரத்

இதையடுத்து ஐ.ம.சு.கூட்டமைப்பு சர்ச்சையை கிளப்பியது.

ஈ.பி.டி.பிக்கும் தெரிவுக்குழுவில் அங்கம் தர வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

“நான் ஆளும் கட்சியில் உள்ளேனா அல்லது எதிர்க் கட்சியில் உள்ளேனா என்பதை விட நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் ஒரு தனிக்கட்சி என்ற ரீதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு கோருகிறேன்“ என  டக்ளஸ் தேவாகந்தா கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது தெரிவுக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதையடுத்தே ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து தெரிவுக்குழு விடயத்தில் வாக்கெடுப்பு நடத்தும் ஐதேகவின் யோசனையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார் இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பு நடக்கும்.

முன்னதாக காலையில் நடந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here