எத்தனை நாளைக்கு நானும் சிங்கிளாக இருப்பது?: திருமணத்திற்கு தயாராகும் ரகுல்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ரகுல், தெலுங்கிலும் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விரைவில் திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாகுமாறு தனது அம்மா வலுயுறுத்துவதாக கூறியுள்ளார்.

திருமணம் குறித்து பேசிய ரகுல், “இன்னும் எத்தனை நாட்களுக்கு சிங்கிளாவே இருப்ப, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லி அம்மா எனக்கு பாடமே எடுத்துவிட்டார். உடனடியாக கல்யாணம் செய்துக் கொள்ள மும்பை, ஹைதராபாத்தில் எனக்கு காதலர்கள் இல்லை. அதனால், நண்பர்களிடம் எனக்கு ஏற்ற மாப்பிள்ளையை பார்க்குமாறு கூறியுள்ளேன்“ என்றார்.

ஏற்கனவே தனது வருங்கால கணவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும் என்றும், கட்டாயம் தெலுங்கு பேசும் நபராக இருக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டிருந்தார். ரகுல் ப்ரீத் மற்றும் ராணா ஆகியோர் காதிலிப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ராணாவும் தானும் நண்பர்களே தவிர காதலர்கள் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

எனவே, விரைவில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கெட்டி மேளம் கொட்டலாமென தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here