கோப்பாய் மாவீரர் தின நிகழ்வுகள்: பொலிசார் தடை கோரிய இடத்தில் இப்போது என்ன நடக்கிறது?

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மாவீரர்தின நிகழ்வுகள் அனுட்டிக்க தயாராகி வரும் நிலையில், அதற்கு எதிராக கோப்பாய் பொலிசார் யாழ் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்திருந்தனர்.

“கோப்பாய் இராணுவத்தின் 512ஆவது படைத்தளம் அமைந்துள்ள (மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்) காணிக்கு முன்பாக உள்ள சிறிதரன் என்பவருடைய காணி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது சட்டவிரோதமானது. எனவே, அந்த நிகழ்வை நடத்த தடைவிதிக்க வேண்டும்“ என கோப்பாய் பொலிசார் யாழ் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையில், நேற்றும் இன்றும் அந்த பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டனர். பொலிசாரின் வழக்கில் குறிப்பிடப்பட்ட இடம் (சிறிதரன் என்பவரின் காணி) இப்போது எப்படியிருக்கிறது தெரியுமா?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here