புதிய நியமனங்கள் வேண்டாம்… ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு!

மறு அறிவித்தல் வரும்வரை அரச நிர்வாக உயர்பீடங்களில் நியமனங்கள் செய்ய வேண்டாமென ஜனாதிபதியின் செயலாளர் விசேட சுற்றறிக்கையொன்றை அனுப்பியுள்ளார். அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அப்படி அவசர தேவை இருக்குமாயின் மேலதிக செயலர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் அல்லது ஓய்வு பெற்ற தகைமை உள்ள அரச அதிகாரி ஒருவர் அல்லது சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத வகையில் நியமிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதமர் – அமைச்சரவை – பொதுநிர்வாக அமைச்சு- நிதி அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here