இலங்கையில் திடீரென ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் குழப்ப நிலைமைக்கு எதிராக சர்வதேச சமூகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க செனட்டர் க்ரிஸ் வன் கொலன் கடிதமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
2015 இல் இருந்து மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் அமெரிக்கா கடைப்பிடித்து வரும் நட்புறவு கொள்கையை சுட்டிக்காட்டிய க்ரிஸ் வன் கொலன், ஜனாதிபதியினால் அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அரசியலமைப்பின்படி செயற்பட்டு தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தியுள்ளார்.