பாக்கு கடத்தல்: விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சனத்!

முன்னாள் இலங்கை அணி தலைவர் சனத் ஜெயசூரிய மீது இந்திய பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

இந்தியாவின் நாக்பூரில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பழுதடைந்த பாக்குகளை இந்திய அதிகாரிகள் கைப்பற்றிய வேளை அவற்றிற்கும் சனத்ஜெயசூரியவிற்கும் தொடர்பிருப்பது தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து மும்பாய் பொலிஸிற்கு சனத் ஜெயசூரிய அழைக்கப்பட்டார் என தெரிவித்துள்ள இந்திய ஊடகங்கள் மேலதிக விசாரணைகள் குறித்த கடிதமொன்றை இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளன.

மேலும் இரண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் டிசம்பர் 2 ம் திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக்கு இந்தியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது என இந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாக்கு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கையில் போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன எனவும் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர்கள் தங்கள் அரசாங்கத்தில் தங்களிற்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அனுமதிப்பத்திரத்தை பெற்று போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர் எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here