பிள்ளையானிற்கு தொடர்ந்து விளக்கமறியல்!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உண்மை விளம்பல் விசாரணை பெறப்பட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையும் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான், நேற்றைய தினம் (21) விடுதலை செய்யப்படுவார் என்ற பலத்த எதிர்பார்ப்புடன், மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத்தொகுதிக்கு முன்னால் கட்சி உயர்பீட உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் காத்திருந்த நிலையிலேயே, மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவத்தில், குற்றம் சுமத்தப்பட்டு, 11.10.2015 அன்று பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருந்து, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here