சுகாதார நடைமுறைகளை பொருட்படுத்தாது இரணைமடுவை பார்வையிட குவியும் பொது மக்கள்

எந்தவிதமாக சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்காது இரணைமடு குளத்தை
பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலிருந்து வருகை
தந்த பொது மக்களால் இன்றையதினம்(14) கிளிநொச்சி இரணைமடுகுளப் பகுதி
நிரம்பியிருந்தது.

கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகள் எதனையும் பொது மக்கள் இதன் போது
கடைபிடிக்கவில்லை, அதிகளவானவர்கள் முககவசம் கூட அணிந்திருக்கவில்லை,
கூட்டம் கூட்டமாக நெருசல்களுடன் இரணைமடுகுளப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
பாலத்தில் நின்றவாறு வான் பாய்வதனை இரசித்து வருகின்றனர்.

பொலீஸார் கடமையில் இருக்கின்ற போதும் அவர்களும் பொது மக்களை
கட்டுப்படுத்தவில்லை உரிய அதிகாரிகளும் இது தொடர்பில் கவனம்
செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் (14) 37.5 அடியடிாக காணப்படுகின்ற நிலையில
அதன் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதோடு, வான்
பாய்ந்தும் வருகிறது. இதனை பார்வையிடுவதற்கே பொது மக்கள் மாலைநேரங்களில்
குவிந்த வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here