“வணக்கம் அண்ட் ஹப்பி தைப் பொங்கல்”: தமிழர்களுக்கு பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து

தைத் திருநாளை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வணக்கம் அண்ட் ஹப்பி தைப் பொங்கல் என்ற வாழ்த்துகளுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கல் பண்டிகை என்பது பொங்கல் என்னும் சுவையான உணவுக்காக மட்டுமின்றி ஒரு பெருவிழா என்பதை அறிவேன் என்றும், இந்த விழாவானது அறுவடையை ஒட்டி விவசாயிகள் வழிபாடு செய்யும் திருநாளாக இருந்துள்ளது குறிப்பிட்டுள்ளார். இந்த திருநாளை பிரிட்டன் தமிழர்களுடன் இணைந்து கொண்டாட இருப்பதாகவும் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் வர்த்தகத்தின் மூலம் இங்கிலாந்து பொருளாதாரத்தை உயர்த்தியிருப்பதாகவும், பாடசாலைகளில் பாடங்கள் நடத்தியும், நோயாளிகளுக்குச் சேவை செய்தும், அங்குள்ள சமூகத்துக்கு பெரும் பணி ஆற்றி வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் நாட்டை உலகத் தரத்தில் உயர்த்த தமிழர்களின் ஒவ்வொரு குடும்பமும் பாடுபடுவதாக கூறியுள்ள ஜோன்சன், இதற்காகத் தமிழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here