பாராளுமன்றத்திற்குள் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதிலளித்த விதம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேச்சு சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலாக ஐக்கிய மக்கள் சச்தி குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பில் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இரு பிரிவுகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்திய சம்பவங்களை கவனித்ததாகவும், எதிர்காலத்தில் இந்த விஷயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பேன் என்றும் கூறினார்.
ஐ.ம.ச சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டலி சம்பிக ரணவக்க, ராஜித சேனரத்ன, மனுஷா நானாயக்கர, ஹரின் பெர்னாண்டோ, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.