தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய தொழிலதிபருக்கு 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிக்கரவெட்டிய பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குழந்தையின் பிறந்த தினத்தில் மதுபான விருந்து நடத்தியுள்ளனார். இதில் தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறி பலர் கலந்து கொண்டனர்.
பொலிஸ் அதிகாரியொருவரும் கலந்து கொண்டிருந்தார். அவர் பின்னர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து, மதுபான விருந்தில் கலந்து கொண்ட, 36 பேரின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
குறித்த தொழிலதிபருக்கு எதிராக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று (12) நிக்கரவெட்டி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தொழிலதிபருக்கு 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.