நோர்வூட்டில் காணி அபகரிக்க முயன்ற குழு விரட்டியடிப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நோர்வூட் தோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியூவெல் தோட்டத்தில் காணி அபகரிப்பில் ஈடுபட்ட குழுவை, தோட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் இணைந்து நேற்று (12) வெளியேற்றினர்.

தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள காஸல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மேலே யூகலிப்டஸ் தோட்டத்துடன் 03 ஏக்கர் நிலப்பரப்பிற்கான சட்டபூர்வ ஆவணம் இருப்பதாக கூறி, தம்புள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் நில அபகரிப்பில் ஈடுபட முயன்றனர்.

தோட்ட அதிகாரிகள் மற்றும் நோர்வூட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது குழு தப்பி ஓடிவிட்டதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

நில அபகரிப்பு தகவல் கிடைத்ததும், தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் நிலங்களை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு வந்து நிலத்தை காப்பாற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here