5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 41 வயது ஆசாமியை பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறக்குவாணை பிரதேசத்தில் கடந்த 10ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி உடல்நிலை மோசமான நிலையில், இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் நண்பரான 41 வயது ஆசாமி, சிறுமியை அருகிலுள்ள பற்றைக்காட்டிற்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.