பிஸ்னஸ் கணக்குகளுக்கு மட்டுமே பிரைவசி பொலிசி மாற்றங்கள் பொருந்தும்: வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

வட்ஸ்அப் செயலியில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சகஊழியர்களுக்கு பயனாளர்கள் அனுப்பும் செய்திகளை தங்களால் பார்க்கவோ அழைப்புகளை கேட்கவோ இயலாது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வட்ஸ்அப் செயலியின் பிரைவசி பொலிசியை அந்நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.

பெப்ரவரி 8ஆம் திகதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் குறித்து எழுந்த சந்தேகங்களாலும், அதிருப்தியாலும் சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு பலரும் மாறி வருகின்றனர்.

இந்நிலையில், பிஸ்னஸ் வட்ஸ்அப் கணக்குகளுக்கு மட்டுமே பிரைவசி பொலிசி மாற்றங்கள் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றபடி, நண்பர்கள், குடும்பத்தினருக்கு அனுப்பப்படும் மெசேஜ்களின் அந்தரங்க தன்மையை எவ்விதத்திலும் பாதிக்காது என குறிப்பிட்டுள்ளது.

வதந்திகள் பரவியதால் விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ள வட்ஸ்அப் நிறுவனம், பிரைவேட் மெசேஜ்களுக்கும், குரூப் சாட்களுக்கும் என்கிரிப்சன் எனப்படும் இரகசிய குறியீட்டு முறை பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

என்கிரிப்சன் இருப்பதால் பயனாளர்களின் பிரைவேட் மெசேஜ்களை பார்க்கவோ, அழைப்புகளை கேட்கவோ வட்ஸ்அப் நிறுவனத்தால் முடியாது என்றும், இதேபோல, ஃபேஸ்புக் நிறுவனமும் மெசேஜ்களை படிக்கவோ அழைப்புகளை கேட்கவோ முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

200 கோடி பயனாளர்களின் தகவல் தொடர்பு குறித்த விவரங்களை சேமித்து வைப்பது அந்தரங்க தன்மைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் என்பதால், அந்த வேலையை தாங்கள் செய்வதில்லை என்றும், மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களே இதைச் செய்கின்றன என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

பயனாளர்கள் பகிரும் லொக்கேசன் விவரங்களையும் வட்ஸ்அப் நிறுவனம் பார்க்காது என்றும், கென்டாக்ட் லிஸ்ட் விவரங்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட வேறு எந்த செயலியுடனும் பகிர்ந்து கொள்ளப்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here