பைசால் காசிம், எச்.எம். எம். ஹரீஸுக்கு தொற்று இல்லை!

பாராளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசிம், எச்.எம். எம். ஹரீஸுக்கு கொவிட் 19 தொற்று இல்லை என பரிசாதனை முடிவின் பெறுபேறு தெரிவிக்கின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளானதை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் அவருடன் இருக்கின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் அவரின் பொறுப்பாக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் இன்று (12) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் என்ற பெறுபேறுகள் கிடைத்துள்ளது. இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எச்.எம்.எம். ஹரீஸுக்கு  மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் என பெறுபேறுகள் கிடைத்துள்ளதாக அவர் தன்னுடைய சொந்த டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here