எம்.பி பதவியை இழக்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் இடத்திற்கு அஜித் மன்னம்பெரும!

4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கவுள்ளார்.

அவருக்கு மேன்முறையீடு செய்ய வாய்ப்பில்லாததால், அவரது உறுப்புரிமை இழப்பது உறுதியானது என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்க, கடந்த நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். கம்பஹா மாவட்டத்தில் ஐ.ம.ச சார்பில் 4 பேர் தெரிவாகினர்.

விருப்பு வாக்கின் அடிப்படையில் 5வது இடத்தை பிடித்த அஜித் மன்னபெரும, புதிய நாடாளுமன்ற உறுப்பினராகுவார் என தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹாவில் ஐ.ம.ச விருப்பு வாக்கு விபரம் வருமாறு-

சரத் ​​பொன்சேக – 110,555
ரஞ்சன் ராமநாயக்க – 103,992
ஹர்ஷன ராஜகருணா – 73,612
கவிந்த ஜெயவர்தன – 52,026

அஜித் மன்னப்பெரும -47212

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here