போலி ஆவணம் தயாரித்து கைதி விடுவிப்பு!

வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சிறை காவலர்கள் இருவர் உட்பட மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் குறித்த நபர் வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 25 திகதி சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடன் சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், சிறைச்சாலை திணைக்களத்தினாலும் விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறைச்சாலை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த கைதி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்காக சிறை காவலர்கள் உட்பட முவர் உதவி புரிந்துள்ளதாக தகவல் வெளியானதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஆதன்படி, ஒழுக்காற்று விசாரணைகளுக்கு அமைவாக அவர்கள் மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here